உன் கூடுதல் நேரத்தைக் குப்பையில் போடு!
அது
ஒன்றும் இல்லை
அதை
அப்படியே விட்டு விடுங்கள்
அதைச்
சரிபடுத்தவோ நெறிபடுத்தவோ வேண்டியதில்லை
அதில்
தவறானது ஏதோன்றுமில்லை நெறியற்றதும் இல்லை
அப்படி
இருப்பின் அதுவே சரியாகும் அதுவே நெறியாகும்
அவசரமாக
எதை மாற்றியும் எதுவும் ஆகப் போவதில்லை
எல்லாம்
சிறிது சிறிதாக மாறித்தான் போகும்
மனிதர்கள்
எத்தனையோ கோடி ஆண்டுகள் வரை வாழ்வார்கள்
நீ வாழப்
போவது அறுபதோ எண்பதோ நூறோ
அதற்கும்
குறைவான அற்பாயுசோ
எந்தக்
கணத்திலும் மனிதர்கள் மாண்டு போகலாம்
மனிதர்கள்
எண்ணுவதோ மனித ஆயுள் என்பது நீளமானது
எவ்வளவு
கருவிகள்
எவ்வளவு
உபகாரங்கள்
எவ்வளவு
வசதிகள்
எவ்வளவு
சொகுசுகள்
எவ்வளவு
வாய்ப்புகள்
மனிதர்களுக்கு
இந்த நீளமான ஆயுளில்
ஒரு
நாளுக்கு இருபத்து நான்கு மணிநேரம் போதவில்லை என்கிறார்கள்
அவர்களுக்குக்
கூடுதல் நேரம் இல்லை என்று சொல்கிறார்கள்
இருந்தால்
என்ன செய்வார்கள்
இன்னும்
கொஞ்சம் நேரம் சாட் செய்வார்கள்
இன்னும்
கொஞ்சம் பேஸ்புக்கில் மேய்வார்கள்
இன்னும்
கொஞ்சம் வாட்ஸ்ஆப்பில் கடலை போடுவார்கள்
இன்னும்
கொஞ்சம் இன்ஸ்டாவில் அல்லது யூடியூப்பில் ஆழ்ந்து போவார்கள்
இன்னும்
கொஞ்சம் செல்போனில் கேம் ஆடுவார்கள்
வேறென்ன
செய்யப் போகிறார்கள் கூடுதலாகக் கிடைக்கும் நேரத்தைக் கொண்டு
இருக்கின்ற
நேரத்தில் வாழப் பாருங்கள்
பிறகு
கூடுதல் நேரத்தைப் பற்றி யோசிக்கலாம் என்று
இவர்களிடம்
யார் சொல்லப் போகிறார்கள்
அப்படிச்
சொல்வதற்கு யாருக்கு இங்கு நேரம் இருக்கிறது
அந்த
நேரத்தில் விளம்பரம் ஓடும் ஓர் அலைவரிசையை மாற்றி
வேறு
ஒரு அலைவரிசைக்கான அவசரத்தில் இருப்போர் என்னதான் செய்வார்கள்
*****
No comments:
Post a Comment