பேரார்வத்தின் இடம்
எல்லாரையும் விட
வேகமாக
உயரமாக
வளர வேண்டும் என்ற பேரார்வம்
அபார்ட்மெண்டின்
அறுபதாவது தளத்தில்
அமெரிக்காவில்
வைத்திருக்கிறது
யாருமற்ற தனிமையில்
*****
நூறு ரூபாய்க்கு இரண்டு கிலோ
கிலோ ஐம்பது ரூபாய் என்று
சொல்லியிருக்கலாம்
இரண்டு கிலோ நூறு ரூபாய்
என்று சொல்வதில்தான்
வியாபாரம் இருக்கிறது
ஒரு கிலோ வேண்டியவர்கள்
ஐம்பது ரூபாய்க்கு வாங்கிக்
கொள்கிறார்கள்
நூறு ரூபாய்க்குத்தான் வாங்க
முடியும் என்று
இரண்டு கிலோவாகவும் வாங்கிக்
கொள்கிறார்கள்
இருபது ரூபாய்தான் இருக்கிறது
என்பவருக்கும்
விற்றுக் கொண்டுதான் இருக்கிறார்
வியாபாரி
*****
No comments:
Post a Comment