சிங்கத்திற்கு நேர்ந்த அசிங்கம் – நவீன பஞ்ச தந்திரக் கதை
ஒரு
சிங்கத்தின் போதாத காலம்.
பேச்சாளனைக்
கொன்று தின்ன பார்த்தது.
கடைசி
ஆசையென அந்தப் பேச்சாளன் அதனிடம் ஒரு மணி நேரம் பேச அனுமதி கேட்டான்.
தொலைந்து
போகிறான் என சிங்கமும் அனுமதித்தது. அதுதான் அதன் போதாத காலம்.
பேச்சாளன்
பேச ஆரம்பித்தான்.
பத்து
நிமிடத்துக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் மண்டையைப் போட்டது சிங்கம்.
இதிலிருந்து அறியப்படும் நீதி :
ஒருவரின்
கடைசி ஆசையை நிறைவேற்ற முயலும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால்
உயிர்போகும் அளவுக்கு அவஸ்தையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சில நேரங்களில் உயிரும்
போனாலும் போய் விடும்.
*****
No comments:
Post a Comment