வீரப்ப தக்கம்!
சப்பாத்தி
எப்படி என்கிறாள் மனைவி.
நன்றாக
இல்லை என்றா சொல்ல முடியும்.
பிரமாதம்
என்கிறேன்.
இன்னொரு
சப்பாத்தி வந்து விழுகிறது தட்டில்.
இப்படியாகத்
தலையில் வந்து விழ வேண்டிய சப்பாத்தி அல்லது பூரிக் கட்டையிலிருந்து தப்பிக்கிறேன்.
பர்மிய
ராணுவம் என் வீர தீர சாகசச் செயலுக்காக மார்பில் வீரப்பதக்கம் அணிவிக்கிறார்கள்.
அவ்வபோது
தூக்கம் வராத இரவுகளில் அந்த வீரப்பதக்கத்தை ரகசியமாக எடுத்துப் பார்த்து கொண்டு சந்தோசப்படுகிறேன்.
இன்னும்
தூங்கவில்லையா என்ற மனைவியின் அதட்டல் கேட்கிறது.
கனவில்
விழித்து விட்டேன் என்று பணிவுடன் தூங்கத் தயாராகிறேன்.
கொசு
ஒன்று கடித்துக் குதறி விட்டுப் போகிறது.
ஓசைபடமால்
ஒரு கையில் அடித்ததில் ரத்தம் கக்சிச் சாகிறது கொசு.
கொசுவுக்கு
வீர மரணம்.
அடுத்த
வீரப்ப தக்கம் கொசுவுக்குத்தான்.
அட வீரப்ப
தக்கம் தெரியாதா உங்களுக்கு?
வீரப்பதக்கம்
என்பதை வீரப்பதக்கம் என்றும் சொல்லாம், வீரப்ப தக்கம் என்றும் சொல்லாம்.
*****
No comments:
Post a Comment