மழையைக் கண்டு ஓடும் மனிதர்கள்!
மழையென்பது
என்ன?
தண்ணீர்த்
துளிகளின் கூட்டம்.
கூட்டமாக
வந்தால் மதிப்பு இருக்கிறது.
மழையைப்
பார்த்த்தும் மக்கள் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.
சாலையில்
ஓடிய மக்களை விரட்டி விட்டு, இப்போது மழைநீர் ஓடுகிறது.
இன்னும்
கொஞ்சம் தண்ணீர்க் கூட்டம் ஜாஸ்தி என்றால் அதை வெள்ளம் என்கிறார்கள்.
தண்ணீர்த்
துளிகளின் வெள்ளக் கூட்டம் வீடு தேடி வந்தால் மக்கள் வீட்டை விட்டே ஓடுகிறார்கள்.
படகுகளில்
ஏறி தண்ணீர் கூட்டத்தின் தலை மேல் சவாரி செய்து, தண்ணீர் கூட்டம் தட்டுப்படாத மேட்டுப்பகுதிக்கு
ஓடுகிறார்கள்.
நாம்
கடலுக்குப் பயப்படுவதேன்? அங்கு தண்ணீர் துளிகளின் கூட்டம் அதிகமாக இருக்கிறது.
ஏரியிலும்
குளத்திலும் கூட தண்ணீர் துளிகளின் கூட்டம் உள்ளது.
கூட்டம்
என்றாலே மானுட சமூகத்துக்குப் பயம் உள்ளது.
அதனால்தான்
தண்ணீர்த் துளிகளின் கூட்டத்தைக் குறைத்துத் தம்பளரிலோ, கூஜாவிலோ வைத்துப் பருகுகிறோம்.
அதில் ஓர் ஆனந்தம். “மழையாய், வெள்ளமாய் வந்து பயமுறுத்தல் செய்தாயே! பார்த்தாயா இப்போது
உன்னைச் சீசாவில் அடைத்து விழுங்குகிறேன்” என்று.
தலைக்கு
மேல் தண்ணீர்த் துளிகளின் கூட்டம் போனால் சாணென்ன? முழமென்ன? என்பாள் என் எள்ளுப் பாட்டி,
கொள்ளுப்பாட்டிக் காலத்திலிருந்து தற்போது உள்ள பாட்டி வரை.
ஊழிக்காலம்
என்பது தண்ணீர்த் துளிகளின் பெருங்கூட்டம் என்கிறார்கள். அந்தக் கூட்டம் வரும் போது
அதற்குள் மானுட சமூகத்தின் கூட்டம் அடங்கிப் போய் விடுமாம்.
நிலவுக்கோ,
பிற கிரகத்துக்கோ ஊழிக்காலம் வரப்போவதில்லை. அங்கு தண்ணீர் இல்லை.
இந்தத்
தண்ணீர்த் துளிகளின் புரட்சிக் கூட்டத்தை எதிர்த்துதான் கருப்புக் குடை பிடித்து சிலர்
எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
தண்ணீர்த்
துளிகளின் கூட்டம் காற்றோடு கூட்டணி சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காற்றோடு கூட்டணி
அமைந்து விட்டால் வானிலை ஆய்வு மையம்தான் அந்தக் கூட்டணி குறித்த கருத்துக் கணிப்புகளைக்
கூற முடியும்.
காற்றோடு
கூட்டணி அமைக்கும் தண்ணீர்த்துளிகளின் கூட்டணிக்குப் புயல், சூறாவளி என பல நாமகரணங்கள்.
ராணுவம்,
துப்பாக்கிகள், பீரங்கிகள் இருந்தாலும் காற்று மற்றும் தண்ணீர்த் துளிகளின் கூட்டணிக்கு
அடிபணியத்தான் வேண்டியிருக்கிறது. பேரிடர் மீட்புப் படை என்று வைத்திருக்கிறோமே, அதைக்
கொண்டு துப்பாக்கிச் சூட்டையெல்லாம் நடத்தி விட முடியாது.
தண்ணீர்த்துளிகளின்
கூட்டம் மிகுந்த ஜனநாயகத் தன்மையோடு அகிம்சை வழிமுறையோடு போராடும். அதன் போராட்டத்துக்கு
ஒதுங்கிச் செல்வது அல்லது விலகி ஓடுவதுதான் நல்லது.
நம்மை
விட வலிமை குறைந்த்து என்றாலும் மீன்கள் தண்ணீர்த்துளிகளின் கூட்டத்தைச் சமாளிக்கும்.
மீனுக்கு இருக்கும் கொடுப்பினை மனிதப் பிறவிகளுக்கு இல்லை.
தண்ணீர்த்துளிகளின்
கூட்டம் மீன்களைத் தன்னுடைய பிரஜையாகச் சேர்த்துக் கொள்கிறது. மனிதர்களைச் சேர்த்துக்
கொள்வதில்லை. மனிதன் பாவம். கோபம் வந்தால் ஒரு பாட்டில் தண்ணீர் குடித்து அகந்தையை
அகற்றிக் கொள்ள வேண்டும். தண்ணீர் பிரியாவிட்டால் டயாலிஸிஸ் என்பதெல்லாம் ரொம்ப கஷ்டம்.
*****
No comments:
Post a Comment