23 Feb 2025

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது.

அப்படியானால், மாட்டுச் சமூகம் பிடிக்கிறதா?

ஆம்! பிடிக்கிறது.

ஆட்டுச் சமூகம் பிடிக்கிறதா?

ஆம்! பிடிக்கிறது.

பூனைச் சமூகம் பிடிக்கிறதா?

ஆம்! பிடிக்கிறது.

நாய்ச் சமூகம் பிடிக்கிறதா?

ஆம்! பிடிக்கிறது.

கோழிச் சமூகம் பிடிக்கிறதா?

ஆம்! பிடிக்கிறது.

தாவரச் சமூகம் பிடிக்கிறதா?

ஆம்! பிடிக்கிறது.

மனிதச் சமூகம் மட்டும், ஏன் பிடிக்காமல் போகிறது?

எந்த மாடாவது இன்னொரு மாட்டை வன்புணர்வு செய்கிறதா?

எந்த ஆடாவது இன்னொரு ஆட்டிடம் இன வேறுபாடு காட்டுகிறதா?

எந்தப் பூனையாவது இன்னொரு பூனையைச் சாதி வேறுபாட்டுடன் நடத்துகிறதா?

எந்த நாயாவது இன்னொரு நாயை அடிமையாக வைத்திருக்கிறதா?

எந்தக் கோழியாவது இன்னொரு கோழியைத் தீட்டு என்று ஒதுக்குகிறதா?

எந்தத் தாவரமாவது இன்னொரு தாவரத்தை ஏற்றத் தாழ்வுடன் பார்க்கிறதா?

இங்கே சாமி கூட மனிதர்களை ஏற்றத் தாழ்வுடன்தானே பார்க்கிறது.

என்ன பெரிய சாமி?

ஒரு சமூகம் தொட்டால், அது தீட்டாகி விடும் என்றால்,

அந்தத் தீட்டைப் போக்கிக் கொள்ள முடியாத சாமி என்ன சாமி?

அந்தத் தீட்டிலிருந்து அந்தச் சமூகத்தை விலக்கி விட முடியாத

சக்தி இல்லாத சாமி என்ன சாமி?

*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...