முகவரி மாற்றாத மனிதன்!
மீண்டும்
மீண்டும்
தோல்விதான்
என்
முகவரி
என்னைத்
தேடி வருபவர்கள்
முகவரி
மாறி
சிரமப்படக்
கூடாது என்பதற்காகவே
மாற்றாமல்
வைத்திருக்கிறேன்
முகவரியை
*****
எல்லாரும்
மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புகிறார்கள்
அதற்கு
கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது
முடியாது
என்றால் இப்போதல்ல
பின்னர்
கஷ்டப்பட வேண்டியிருக்கிறது
*****
பின்னால்
நடக்க இருக்கும்
எவ்வளவோ
விசயங்களுக்காக
நாம்
இப்போதே
நாடகமாடி
வைக்கிறோம்
*****
செய்யதையே
செய்து
அலுத்துப்
போய்
ஒரு
நாள் வித்தியாசமாகச் செய்யப் போய்
அதன்
உச்சத்தை அடைவாய்
*****
இவ்வளவு
நேரம்
நீள்வதைப்
பார்க்கையில்
இவ்வளவு
அதிகம்
கசிவதைப்
பார்க்கையில்
ஆறுதல்
தேடும்
கண்களின்
கண்ணீர்
இந்த
மழை
*****
No comments:
Post a Comment