புத்தகக் காட்சி கொடுமைகள்!
இந்தப்
புத்தகக் காட்சியில்
இருபதாயிரத்துக்குப்
புத்தகங்கள்
வாங்கியதாக
முகப்பு
(DP) வைத்து
புல்லரித்துப்
போனேன்
நாற்பதாயிரம்
பார்வைகள் (Views)
முப்பதாயிரம்
பிடித்தங்கள் (Likes)
வாங்கிய
புத்தகங்களில்
எத்தனை
வாசித்தேன்
எல்லாம்
அலமாரியில்
அப்படியே
செல்லரித்துப்
போகின்றன
பூச்சிகள்
வாசித்து விட்டுப் போகின்றன
*****
இந்தப்
புது வருடத்திலிருந்தாவது
வாசித்து
விட்டு
புத்தக
மதிப்புரை எழுத வேண்டும்
இது
புத்தாண்டு உறுதிமொழி
ஒரு
வேளை முடியாது போனால்
அடுத்த
ஆண்டுக்கும்
இதுதான்
புத்தாண்டு உறுதிமொழி
*****
தத்துவத்தில்
யாரும்
என்னை
அடித்துக் கொள்ள முடியாது
நானேதான்
என்னை
நானே
அடித்துக்
கொள்வேன்
*****
எத்தனை
புத்தகங்கள்
எத்தனை
கவிஞர்கள்
எத்தனை
எழுத்தாளர்கள்
எத்தனை
அறிஞர்கள்
எத்தனை
சிந்தனையாளர்கள்
அடேங்கப்பா
நான்
எனக்குப் பிடித்த
ஆறாம்
வகுப்பு தமிழ்ப் புத்தகம் மட்டும்
வாங்கிக்
கொண்டேன்
இது
போதும்
இந்தப்
புத்தகக் கண்காட்சிக்கு
*****
No comments:
Post a Comment