வேகமாகப் போகின்ற வேகம்
வேகத்திற்கு
ஆட்பட்டு விட்டவர்
நிறுத்துவது
தெரியாமல் தடுமாறுகிறார்
கைகளைக்
கால்களை இறுக்கிப் பிடித்துக் கொள்கிறார்
வேகம்
அதிகமாகிறது
எதையோ
உதைக்கிறார் திமிறுகிறார்
வேகம்
இன்னும் அதிகமாகிறது
வேகத்தைக்
குறைக்க தளர்வாக வேண்டும் என்பது புரியாது
மேலும்
இறுக்கிப் பிடிக்கிறார்
அப்படியே
பழக்கப்பட்டுப் போன அவர்
அவரை
இன்னும் இறுக்கிப் பிடித்து
வேகத்தைக்
கூட்டுகிறார்கள் சுற்றி இருப்பவர்கள்
அவர்
வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறார்
நின்று
பார்க்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமல்
*****
No comments:
Post a Comment