மகத்துவம் பெற்ற மருந்தின் பெயர்
அடித்தார்கள்
பறித்தார்கள்
இருப்பதையெல்லாம்
ஏதும் பாக்கியில்லாமல் பிடுங்கினார்கள்
முடிவில்
நல்லவராக இருக்க வேண்டும் என்று போதித்தார்கள்
சிறுபிராயத்தின்
வெக்கை நினைக்க நினைக்க
வியர்க்க
வைக்கிறது புழுங்க வைக்கிறது
வேதனை
தாளாமல் அழும் பொழுதுகளில்
இப்பிராயத்தின்
எதையோ அடைந்த விட்ட வாழ்க்கை
ஆறுதல்
சொல்கிறது பக்குவம் போதிக்கிறது
ஆறாத
ரணங்கள் அங்கங்கு இருப்பதும்
ரகசிய
இடங்களில் விரவி இருப்பதும்
மருந்திடும்
செவிலியருக்குத் தெரியாது
மருந்திட்டுக்
கொள்ள வேண்டியது கடமை
எல்லா
ரணங்களும் ஆற வேண்டும் என நினைப்பது பேதைமை
வடுக்களை
அகற்றும் வல்லமை பெற்ற மருந்தின் பெயர் மரணம்
மரணம்
எல்லாவற்றையும் தீர்த்து வைக்கிறது
ரணங்களை
வலிகளை
வேதனைகளை
மரணத்திற்குப்
பின் ஏதுமில்லை
மரணத்தைத்
தவிர
*****
No comments:
Post a Comment