1 Sept 2024

ஒரு முடிச்சை அவிழ்க்க முனையும் போது

ஒரு முடிச்சை அவிழ்க்க முனையும் போது

பிரச்சனை ஒரு பிரச்சனை அவ்வளவே

தன்னுணர்வோடு தொடர்பு கொள்ளும் போது

பிரச்சனை ஒரு தலைவலியாகிறது

தீர்க்க முடியாதோ என நினைக்கும் போது

பிரச்சனை ஒரு வயிற்று வலியாகிறது

இதற்கு மேலும் தாங்க முடியாது எனும் போது

பிரச்சனை ஒரு பல் வலியாகிறது

பிரச்சனைகளை விவேகத்தோடு அணுகுகையில்

ஆணவத்தோடு தொடர்புறாமல் இருக்க வேண்டும்

பிரச்சனைகளைத் தீர்க்க முனைகையில்

அகம்பாவத்தாடு இணைவு கொள்ளாமல் இருக்க வேண்டும்

பிரச்சனைகளை முடித்து வைக்க நினைக்கையில்

நான் எனும் உணர்வு எழாதிருக்க வேண்டும்

பிரச்சனைகள் உணர்வுகளை உருவாக்குகின்றன

உணர்வுகளோடு பிரச்சனைகளைக் கையாளாதிருக்க வேண்டும்

பிரச்சனை ஒரு பிரச்சனை அவ்வளவே

அதனோடு நீங்கள் சம்பந்தப்படாத வரை

எந்தப் பிரச்சனையையும் உங்களால் தீர்க்க முடியும்

உங்கள் பிரச்சனையோடு உங்களுக்கு இருக்கும்

சம்பந்தத்தை வேரறுங்கள்

பிரச்சனையின் தீர்வை உடனடியாகக் காண்பீர்கள்

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...