மாறித் தொலைதல்
யாராலும் யாராகவும் மாற முடியாது
அவர் அவராக இருக்கலாம்
அவரைப் போல மாற நினைப்பவர்
கூடிய விரைவில் மரணித்து
விடுவார்
உயிரோடு இருக்க நினைப்பவர்கள்
யாராயினும்
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
மரணிக்க நினைப்பவர்கள் மட்டும்
மாறித் தொலையுங்கள்
*****
விற்பனையுகம்
அவரவர்கள் ஏதாவது செய்தால்தான்
அவரவர்களும் பிழைக்க முடியும்
குறிப்பாக வியாபாரம்
மக்கள் நிறுவனங்களே அதைத்தான் செய்கின்றன
மது விற்கின்றன
நீங்களும் எதையாவது விற்றுத்
தொலையுங்கள்
மானம் வெட்கம் ரோஷம் கற்பு
இப்படி எதையாவது
*****
பிக்கல் பிடுங்கல்
வாழ்க்கையில் இருக்கும் பிக்கல்
பிடுங்கல் போதாதா
போலீஸ்காரர் பல்லைப் பிடுங்குகிறார்
பல் மருத்துவர்களிடமிருந்து
எந்த எதிர்ப்பும் இல்லை
ஒரு பேரணி
ஒரு ஆர்ப்பாட்டம்
ஒரு போராட்டம்
எதுவும் இல்லாவிட்டால்
இந்தப் பிரச்சனை எப்படி அடங்கும்
*****
No comments:
Post a Comment