அப்பாக்களைப் போலில்லாத புருஷர்கள்
அம்மாவிடம் ஒரு நாள் கேட்டேன்
அப்பா ஏன் உன்னை அடித்தார்
உன் அப்பா என்னை எங்கே அடித்தார்
என் புருஷன் என்னை அடித்தார்
என்றாள்
என் அப்பாவுக்கும்
உன் புருஷனுக்கும் என்ன வேறுபாடு
என்றேன்
உனக்கொரு புருஷன் வந்து
உனக்கொரு குழந்தை பிறக்கும்
போதுதான்
அது புரியும் என்றாள்
நான் அம்மாவின் முகத்தைப்
புரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
எல்லாம் புரிவதற்கு ஒரு காலம்
வர வேண்டும் என்று
என்னைப் பார்க்கும் போதெல்லாம்
அம்மா சிரித்துக் கொண்டிருக்கிறாள்
*****
No comments:
Post a Comment