சாவின் வடிவம் முக்கோணம்
வாங்கிய பண்டங்கள்
தின்ன முடியாத போது
அபூர்வ பண்டங்களாகி விடுகின்றன
அபூர்வ பண்டங்களை
அதியமான்கள் தின்பதை விட
ஔவைப் பிராட்டிகள் தின்பதே
பொருத்தமென
அப்பத்தாவுக்காகச் சூடாக
வாங்கி வந்த பண்டமது
சாவின் சமீபத்திய வடிவம்
முக்கோணமாக இருந்தது என்பதைச்
சொல்கிறது
அப்பத்தா பண்டம் மண் என்ற
முக்கோண சுழற்சியில்
இறுதியில் மண்தான் தின்னப்
போகிறது
அப்பத்தாவின் உடலையும்
அப்பத்தாவுக்காக
ஆசை ஆசையாக வாங்கி வந்து
மண்ணில் கிடக்கும் சமோசாவையும்
*****
No comments:
Post a Comment