மகிழ்ச்சியின்மையில் தரும் தண்டனைகள்
உன் மகிழ்ச்சி நிரந்தரமில்லை
உன் ஆசைகள் நிறைவேறினால்
ஒரே அடியாக மகிழ்வாய்
நிறைவேறாத உன் ஆசைகளுக்கு
என்னை அணுஅணுவாய்த் தண்டிப்பாய்
உன் தண்டனைகளின் உக்கிரம்
தாளாது
உன் ஒவ்வொரு ஆசையும் நிறைவேற
வேண்டும் என்று
ஆண்டவனிடம் பிரார்த்திக்
கொள்கிறேன்
உன் மகிழ்ச்சியின்மை
என்னைக் கொடூரமாகத் தண்டித்துக்
கொண்டே இருக்கின்றன
எனக்கென்று மகிழ்ச்சி இருக்கிறதா
என்ன
நான் உன் அடிமையாகி விட்ட
பிறகு
உன் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி
உன் மகிழ்ச்சியின்மை என்
நரகம்
நீ எப்போது மகிழ்ச்சியாக
இருப்பாய்
எப்போது மகிழ்ச்சியின்மையோடு
இருப்பாய்
யாருக்கும் தெரியாது
உன் மகிழ்ச்சியின்மையான பொழுதுகளில்
எனக்கான தண்டனைகள் மட்டும்
நிச்சயம்
*****
No comments:
Post a Comment