புத்தர் சரியாகத்தான் சொன்னார்
ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்
போது
அதீத உழைப்பைக் கோருகிறது
உயிரையும் ரத்தத்தையும் ஒரே
நேரத்தில்
உறிஞ்சும் பிசாசைப் போல நேரத்தை
உறிஞ்சுகிறது
முதலில் அது ஒரு வியாபார
தலத்தை உருவாக்கச் சொன்னது
பிறகு அதன் விளம்பரத்தில்
நடிக்கச் சொன்னது
விளம்பர நடிப்பு சினிமாவை
நோக்கி நெட்டித் தள்ளியது
சினிமாவும் முடிந்த பிறகு
அரசியல் என்கிறது முதல்வர்
என்கிறது
ஒவ்வொரு ஆசை நிறைவேறும் போதும்
அடுத்த ஆசைக்குத் தயாராக
வேண்டியிருக்கிறது
அது ஆணிகளின் கூர் முனையில்
நிற்பதைப் போல
நெருப்புச் சுடரின் மேல்
கட்டப்பட்டிருப்பதைப் போல
மிகு துன்பம் மிகு துயர்
கொண்டதாக இருக்கிறது
புத்தர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்
ஆசையே துன்பத்திற்குக் காரணம்
*****
No comments:
Post a Comment