மறு கவசம்
யாரும் வாங்க மாட்டேங்றான்னு
உள்ளே தூக்கி வெச்சேன்
மறுக்கா போடச் சொல்லிட்டாங்களா
மக்கா
என்ற படிக்கு
சலிப்பைக் கொஞ்சம்
வெற்றிலைச் சீவல் எச்சிலோடு
துப்பிய படிக்கு
முகக்கவசங்கள் அடங்கிய
சவ்வுத்தாள் பையைத் தூக்கி
வெளியே வைக்கிறார்
பெட்டிக்கடைத் தாத்தா
*****
No comments:
Post a Comment