பேப்பரை வியத்தல்
பஜ்ஜி தின்னும் முன்
பேப்பரைப் பயன்படுத்தும்
அறிவை வியப்பதென்றால்
பேப்பரையே உணவாகப் பயன்படுத்தும்
கழுதையும்தான் வியக்கத்தான்
வேண்டும்
தோசையைப் பேப்பர் போலப் போடும்
மாஸ்டரையும் வியக்கத்தான்
வேண்டும்
மனிதர்களை டிஷ்யூ பேப்பர்
போலப் பயன்படுத்தும்
மனிதர்களையும் வியக்கத்தான்
வேண்டும்
விற்பனை ஆகாது என்று தெரிந்தும்
அறுபது பக்கம் எண்பது பக்கத்தில்
கவிதைப் புத்தகம் போடும்
கவியையும் வியக்கத்தான் வேண்டும்
வியக்கத்தக்க அனைத்தும் பேப்பரில்
எழுதப்படும்
பேப்பரைப் பயன்படுத்தும்
அனைவரும் வியக்கப்படுவர்
பணத்தைப் பாருங்கள்
பேப்பரின் மதிப்பு சொல்லாமல்
விளங்கும்
பணத்தில் நிறைய பேப்பர் வைத்திருப்பவரை
வியக்காமல் பார்ப்பதெப்படி
*****
No comments:
Post a Comment