மௌனத்தின் ரகசியங்கள்
பேரொலிச் சத்தங்களின் ஊடே
ஊமைகளாகி விடுகின்றன
மௌனத்தின் ரகசியங்கள்
மௌனமாய் வெடிக்குமோ ஊசி வெடியாயினும்
பற்ற வைப்பது ஒரு பொறியாயினும்
பல நிறங்களின் பொறி காட்டியன்றோ
வெடிக்கின்றன வான வேடிக்கைகள்
எந்த நிறம் காட்டி எப்படி
வெடித்தாலும்
இறுதி நிறம் கருமையாகிறது
எவ்வளவு நேரம்
வெடித்துக் கொண்டிருக்க முடியும்
என்று
இறுதியில் மௌனமாகும் பொழுதுகளில்
மௌனம் தன் ரகசியங்களைச் சொல்லும்
என்று எதிர்பார்க்கிறேன்
மௌனித்திருப்பது ரகசியம்
காக்கத்தான்
என்பதைச் சொல்லி
அந்தப் பொழுதிலும் ரகசியமாய்
இருக்கின்றது மௌனம்
*****
No comments:
Post a Comment