28 Mar 2022

குறிப்பொதுங்கி ஓடும் வரலாறு

குறிப்பொதுங்கி ஓடும் வரலாறு

அதன் சுற்றுப்பயணம் அங்கேயே இருக்கிறது

தினமும் சுற்றுகிறது பல கிலோ மீட்டர் வேகத்துக்கு

என்றாலும் அங்கேயே தொடங்கி

அங்கேயே முடிகிறது அதன் சுற்றுப்பயணம்

மையத்தை விட்டு விலகிச் செல்லும் சுதந்திரம்

அதன் சுற்றுப்பயணங்களுக்கு இல்லை

கடிகாரத்தின் சுற்றுப்பயணம் போல்

மின்விசிறியின் சுற்றுப்பயணம் போல்

சுற்றுப்பயணங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன

ஈர்ப்புத்தன்மையை இழந்து விட்ட காந்தம்

மண்ணில் புரண்டு புரண்டு காணும்

ஏமாற்றங்களைச் சந்திக்கின்றன அதன் பிரதானத் திட்டங்கள்

தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன

சுற்றுப்பயணங்களுக்கான பரிவாரக் கூட்டங்கள்

திருப்தி அடைவதோடு முடிந்து விடுவதோடு

ஒவ்வொரு நாளும் விடிந்து மறைகின்றன

என்னவோ எதுவோ ஏட்டில் எழுதிக் கொள்ளும்

வரலாறு காத தூரம் ஓடிக் கொண்டிருக்கிறது

வேறு ஒருவரின் சுற்றுப்பயணங்களைக் குறிப்பெடுத்தபடி

*****

No comments:

Post a Comment

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...