8 Jan 2022

இருப்புக்கான அத்தாட்சி

இருப்புக்கான அத்தாட்சி

என் பெயர் என்ன என்பதை

நான் எப்படிச் சொல்ல முடியும்

அதற்கான சான்றிதழ்தான் அதைச் சொல்ல முடியும்

நான் என்ன சாதி என்பதை

நான் எப்படிச் சொல்ல முடியும்

அதற்கான சான்றிதழ்தான் அதைச் சொல்ல முடியும்

என் குடும்ப வருமானத்தை

நான் எப்படிச் சொல்ல முடியும்

அதற்கான சான்றிதழ்தான் அதைச் சொல்ல முடியும்

என் வசிப்பிடத்தை

நான் எப்படிச் சொல்ல முடியும்

அதற்கான சான்றிதழ்தான் அதைச் சொல்ல முடியும்

நான் உயிரோடிருக்கிறேன் என்பதை

நான் எப்படிச் சொல்ல முடியும்

அதற்கான சான்றிதழ்தான் அதைச் சொல்ல முடியும்

பிறகேன் நீ இருக்கிறாய் என்பீர்கள்

சான்றிதழ் சுட்டுவதற்கு ஓர் ஆள் வேண்டியிருக்கிறது

அதற்காகவேனும் இருப்பில் ஒருவர் வேண்டியிருக்கிறது

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...