7 Jan 2022

மறதியில் கரைந்து போகும் நினைவுக் குறிப்புகள்

மறதியில் கரைந்து போகும் நினைவுக் குறிப்புகள்

மனித சுபாவங்கள் வித்தியாசமானது

பெருங்காட்டின் மிருகங்களைப் போலவும் தாவரங்களைப் போலவும்

எல்லாரையும் மன்னித்து விடுவது நல்லது

கலைந்துப் போகும் மேகங்களைக்

கணக்கில் எடுத்துக் கொள்ளாத வானத்தைப் போல

கண்டிக்கவோ தண்டிக்கவோ வேண்டியதில்லாத போது

மனக்கடலின் கொந்தளிப்புகள்

மழைநீர் விழுந்த தீயாய் அடங்கிப் போகின்றன

பின்தொடரும் நாட்களிலிருந்து பார்க்கையில்

கடந்து போன நாட்கள் உதிர்ந்து போன இலைகள்

இலைகள் துளிர்ப்பதும் உதிர்வதும்

கால மரத்தின் கணக்குப் புத்தகத்தில் அடங்காதவை

இஷ்டம் போல் மாற்றிக் கொள்ளும் நினைவின் அமீபாக்கள்

ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு உருவிலானவை

அழகோ அழகற்றதோ பேதமின்றிச் சிதைக்கும்

மண்ணுக்கு எதுவும் முக்கியமில்லை

வெறுப்பு வன்மம் வெறி என எல்லாவற்றையும்

கண்டும் காணாமல் செரித்தபடி சுழன்று கொண்டிருக்கும்

பூமியின் நினைவுக்குறிப்புகளில்

நிறைந்திருக்கின்றன மறதியின் வடுக்கள்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...