5 Jan 2022

எதிர்காலத்தின் அற்புத மலர்

எதிர்காலத்தின் அற்புத மலர்

ஒவ்வொரு முறை நழுவிச் செல்லும் போதும்

கைவிடாமல் பின்தொடர்கிறாய்

காதலின் தொலைதூர முத்தங்கள் மீதான ஏக்கம்

நிழலைப் போலப் பற்றிப் படர்கிறது

ஏமாற்றங்களைப் போல எதிர்பார்ப்புகளும்

எப்போதும் மிச்சம் இருக்கிறது

விலகிப் போகும் இதயங்கள்

ஒன்று சேர்கிற ஒரு பொழுது வந்து சேரும்

நம்பிக்கையின் மேல் நாட்கள் நகர்ந்து செல்கின்றன

நானும் நீயும் சந்திக்க முடியாத தூரத்தில்

பின்தங்கிக் கொண்டு இருக்கிறோம்

தொட்டுத் தொடர முடியாத தொலைவு என்று

கேள்விப்படுபவர்கள் சொல்கிறார்கள்

எது எப்படியோ எது என்னவோ

இரு துருவங்களையும் ஈர்த்து இணைக்கும் சக்தி

இதயத்தின் வசியத்துக்கு இருக்கிறது

பிரிதலின் பின்னான இணைவு

எதிர்காலத்தில் பூக்க இருக்கும் அற்புத மலர்

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...