5 Jan 2022

இயல்பாதல்

இயல்பாதல்

அவர்கள் நம்பிக்கையை உடைக்கப் பார்க்கிறார்கள்

நம்பிக்கையை உடைப்பது அவர்களுக்கு விளையாட்டு

முடக்குவதற்கான உபாயங்களைக் கையாள்வது

அவர்களின் தந்திரமான பொழுதுபோக்கு

ஒவ்வொன்றும் அவர்களை எதிர்ப்பது

அபாயகரமானது என்பதை மறைமுகமாகச் சொல்வன

அவர்களின் விசயங்களில் தலையிடக் கூடாது

அவர்களின் விசயங்களில் மூக்கை நுழைக்கக் கூடாது

அவர்களை மாற்றவோ திருத்தவோ முயற்சிக்கக் கூடாது

மீறுபவர்கள் உளவியல் ரீதியாகச் சிதைக்கப்படுவார்கள்

மன உளைச்சலில் சிறைவைக்கப் படுவார்கள்

இயல்பாகக் கிடைக்க வேண்டியவற்றை

அவர்கள் கிடைக்க விடாமல் செய்வார்கள்

ஆம் நீங்கள் நினைப்பது சரிதான் அது அப்படித்தான்

அவர்கள் ஆதிக்க வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்

என்பதை நிரூபிக்க என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்

அதற்கான திமிர் அவர்களின் ரத்தங்களில் கலந்திருக்கிறது

அது அவர்களுக்கு இயல்பானது

போராடுபவர்கள் போராடித்தான் ஆக வேண்டும்

அவர்கள் எதைச் செய்தாலும்

சுண்டிப் போய் நின்று விட்ட

ரத்த ஓட்டத்தை ஓடச் செய்ய

எதாவது செய்துதான் ஆக வேண்டும்

போராட்டத்தில் இயங்குதல் இயல்பாகும் வரை

மாற்றங்களை நிகழ்த்துவது இயல்பாவதில்லை

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...