3 Jan 2022

பழகிக் கொள்ளுதல்

பழகிக் கொள்ளுதல்

வீட்டிலிருப்பது பழகி விடுகிறது

செல்லும் இடங்களில் எல்லாம்

ஒரு வீட்டைத் தேடுகிறது மனது

ப்ளாட்பாரத்தில் இருந்திருந்தால்

அதுவும் பழகியிருக்கும்

செல்லும் இடங்களில் எல்லாம்

ப்ளாட்பாரத்தைத் தேட அவசியமின்றி

எங்கும் வியாபித்திருந்திருக்கும்

மூன்று வேளை உணவும் அப்படியே

இரண்டு வேளைதான் கிடைக்கும் என்றால்

அதுவும் பழகியிருக்கும்

ஆடைகள் விசயங்களும் அப்படித்தான்

அரையாடைதான் கிடைக்கும் என்றால்

அதுவும் பழகியிருக்கும்

படிப்பு

வேலை

நாகரிகம் எல்லாம் பழக்கம்தான்

அதிகாரம்

அடக்குமுறை

வெறியாட்டம் உட்பட எல்லாம் அப்படித்தான்

பழக்கப்படுத்தப்படுகிறது பழகிக் கொள்ளப்படுகிறது

*****

No comments:

Post a Comment

மும்மொழிக் கொள்கை – தேவையில்லாத ஆணி!

மும்மொழிக் கொள்கை – தேவையில்லாத ஆணி! இருமொழிக் கொள்கையே தேவையில்லாத ஆணி எனும் போது மும்மொழிக் கொள்கை குறித்து என்ன சொல்வது? தாய்மொழி வழி...