12 Jan 2022

மாபெரும் தவறு

மாபெரும் தவறு

செய்நேர்த்தியும் பேரழகும் மிகுந்த சாலையை

வடிவமைத்ததைக் காட்டிப் பெருமைப்பட்டவர்

இயற்கையின் படைப்பில் இல்லாத ஒன்றைப் படைத்து

பயணங்களை ரம்மியமாக்கி விட்டதாகச் சிலாகித்தார்

கட்டுக்கோப்பு குலையாமல்

வாகனங்கள் செல்வதும் போவதும்

வான வெளியின் கோள்களின் இயக்கத்தை ஒத்திருப்பதை

நினைவூட்டிச் சரிபார்க்க சொன்னார்

திட்டமிட்ட ஆக்கத்தால் இயற்கையின் குறைகளின்றி

எதையும் உருவாக்குவது சாத்தியம் என்ற

வருங்கால தரிசனத்தை முன் வைப்பதாய் சாசுவதம் உரைத்தார்

அளவை விஞ்சும் அற்புதத்தைக் காட்டுவதென

வேகம் அதி வேகமென உருமாறுவதால்

எண்பதாண்டு வாழ்வில் எண்ணூறாண்டு ஆயுளை

அநாயசமாய் வாழும் கால விரிவை விரித்துக் காட்டினார்

மரங்களும் பறவைகளும் இல்லாத சாலையைச்

சுட்டிக் காட்டிய போது

மாபெரும் தவறு நிகழ்ந்திருப்பதை

மௌனமாய் ஒத்துக் கொண்டார்

*****

No comments:

Post a Comment

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள்

அனுபவங்களின் பின் நிற்கும் முடிவுகள் ஏதோ ஒன்றைத் தேட தேடுவது கிடைக்கவில்லை என்பதைத் தவிர வேறொன்றும் பிரச்சனையில்லை இவ்வளவுதான் இப்பட...