ஒருவேளை உணவு
ஒரு வேளை உணவு
கொலை செய்ய தூண்டுமா என்று
கேட்காதீர்கள்
ஆதிமனிதர் அதைச் செய்தார்
அதற்கடுத்த மனிதர் தனக்காக
மட்டும் உணவை விளைவித்தார்
பிற்பாடு வந்த மனிதர் அடுத்தவர்
உணவைப் பதுக்கினார்
தொடர்ந்து வந்து கொண்டிருந்த
மனிதர்
பசி அடக்கல் பசி மறுத்தல்
பசி துறத்தல் நாகரிகம் என்றார்
அதற்கடுத்து அவதரித்த மனிதர்
ஒட்டிய வயிறுகள் தொப்பைகளை
வணங்கி இறப்பதை
மனித்த பிறவியின் மோட்சம்
என்றார்
அனைத்தையும் தொடர்ந்து முழங்கி
வந்த மனிதர்
அதிகாரமற்றவர்களின் பசி அர்த்தமற்றது
என்றார்
தொடர்ந்து வந்த காலங்களில்
பசியும் கொலையும் மாறி மாறி
நிகழ்ந்த போது
கொலை செய்ய வந்த மனிதருக்கு
ஒரு வேளை உணவிட்ட போது
நன்றிப் பெருக்கோடு கையில்
கொணர்ந்த கத்தியைக்
கண்ணீர் மல்க சமர்ப்பித்து
விட்டுப் போனார்
*****
No comments:
Post a Comment