11 Oct 2021

எறும்பு மனிதர்களின் வாழ்க்கை

எறும்பு மனிதர்களின் வாழ்க்கை

எறும்புகளாகி விட்ட மனிதர்கள்

மாநகரச் சாலைகளில் ஊர்ந்து கொண்டிருக்கிறார்கள்

ஒருவர் பின் ஒருவர் செல்வதும்

ஒருவர் பின் ஒருவர் மீள்வதும்

வீடென்னும் புற்றை அடைவதும்

நாளுழைப்பைப் புற்றில் சேமிப்பதும்

உழைப்பில்லா நாளில் செலவழிப்பதும்

எறும்பு மனிதர்களின் செய்கைகளாகி விட்டன

இன்னும் எறும்புகளாகாத மனிதர்கள்

மாநகரச் சாலைகளின் இரு மருங்கிலும் இருக்கும்

நகலகங்களில் தங்களை எறும்புகளாய்ப் பிரதி எடுக்க

வாயில் ஓரங்களில் நின்று கொண்டிருக்கின்றனர்

எறும்பு வாழ்க்கை குறித்த அசூயை இல்லாத மனிதர்கள்

எறும்புகளைப் பார்க்கவும் நேரமின்றி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்

எறும்புகளுக்கான வாழ்க்கையோடு ஓர்மையின்றி

மாநகரச் சாலைகள் எறும்புகளைப் போல ஓடிக் கொண்டிருக்கின்றன

******

No comments:

Post a Comment

அதிர்ஷ்ட கணக்கு

அதிர்ஷ்ட கணக்கு நான் என்ன பெரிய அதிர்ஷ்டசாலி என்று நீங்கள் நினைக்கலாம் என்னைப் பற்றி நினைக்க நான்கு பேர் இருக்கிறார்கள் எனக்காகக் ...