10 Oct 2021

கள்ளச் சிரிப்பு சிரிக்கும் வாழ்க்கையின் பொருள்

கள்ளச் சிரிப்பு சிரிக்கும் வாழ்க்கையின் பொருள்

கால்களின் நகர்வு

புதிய ஊரை நோக்கியா

புதிய ஊரை உருவாக்கவா என்பதை

காலமொன்றே அறியுமோ

நகர்வின் முடிவில் கால்கள் அறியுமோ

நகரும் கால்களில் உத்வேகம் ஏறும் போது

வேகமாக நடக்கும் தொனியில்

தன்னை அறியாமல் இனம் புரியாத

நம்பிக்கையை விதைத்துக் கொள்கின்றன கால்கள்

நடக்க நடக்க

இருப்பதெல்லாம் ஊர் என்பது புலப்பட

கடந்து வந்தப் பாதையைத் திரும்பிப் பார்க்கின்றன கால்கள்

நிலைத்திருக்கும் கால்களுக்குப்

புதிய ஊர்கள் தேவைப்படுகின்றன

பயணப்படுகின்ற கால்களுக்கு

உலகமே ஓர் ஊர் என்றாகிறது

நகர்தலின் சாத்தியத்தில் சுழல்கின்றன

மைய அச்சை நோக்கும் பொருள்கள்

இருப்பிற்கும் இருப்பின் உடைதலுக்கும் இடையே

கள்ளச் சிரிப்பு சிரிக்கிறது வாழ்க்கையின் பொருள்

*****

No comments:

Post a Comment

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா?

மறைந்திருப்பதால் மறந்திருக்க முடியுமா? பழங்களையல்ல வேர்களைக் கவனியுங்கள் பழங்கள் கண்ணுக்குத் தெரிகின்றன வேர்கள் மறைந்திருக்கின்றன பழ...