30 Aug 2021

தலையில்லாமல் டோலக்கு அடிப்பவன்

மழை மறைவு பிரதேசங்கள்

காணாமல் போன மழை

மர இலைகளில்

மறைந்து நிற்கிறது

மழைக்கு பள்ளிக்கு ஒதுங்கியவனைப் போல

பிறிதொரு கணத்தில்

பள்ளியைத் தவற விட்டவனைப் போல

விழுகிறது மண்ணில்

*****

நடு மத்திமம்

நாய்க்குட்டிகளும்

பூனைக்குட்டிகளும்

கண் விழிக்கின்ற நடுச்சாலையில்

வாகனங்கள்

சென்று கொண்டிருக்கின்றன

வெளிச்சத்தைப் பீய்ச்சும் விளக்குகள்

எரிந்து கொண்டிருக்கின்றன

சிவப்பு நிறத்தில்

நில் என்று சொல்ல முடியாத விரக்தியில்

*****

தலையில்லாமல் டோலக்கு அடிப்பவன்

தலையில்லாமல்

தென்படுகிறான் டோலக்கு அடிப்பவன்

அவன் தலை மறைந்து விட்டது

தலை இல்லாமல் போய் விட்டது

முண்டம் ஒன்று டோலக்கு அடிப்பது

சுற்றியிருப்பர்வர்களின் கவனப்பொருள் ஆகிறது

பின்பு காலம் கழிய கழிய

நெடுநேரம் கழித்துத் தெரிகிறது

அவன் தலையைக் குனிந்து கொண்டு

அடித்திருக்கிறான் என்பது

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...