1 Sept 2021

சொல் புனைவு

சொல் புனைவு

மனிதரைச் சுற்றி

எல்லாம் இரண்டிரண்டாக இருக்கிறது

இரண்டுக்கும் சேர்த்து

மனிதருக்குச் சொல் வேண்டும்

ஒரு வார்த்தையில் கடவுளைப் படைத்தான்

இன்னொரு வார்த்தையில் சாத்தானைப் படைத்தான்

மனிதனுக்கு இரண்டு சொற்கள்

தேவையாக இருக்கின்றன

கடவுள் சாகும் நாளில் சாத்தான் இறந்து படுவாராக

மனிதருக்குக் கோபம் வருகிறது

கடவுளைத் தோற்றுவித்து சாத்தானைப் பிரசவித்ததாகச்

சொல்கையில்

கடவுள் என்ற சொல்லில் கருணையையும்

சாத்தான் என்ற சொல்லில் குரூரத்தையும்

பெயர்த்து வைத்த மனிதர்கள்

எல்லாம் தங்களது சொல்புனைவு என்பதை

காலப்போக்கில் எப்படியோ மறந்து போயினர்

மனிதர்கள் கடவுளை வணங்குகிறார்கள்

சாத்தானை வெறுக்கிறார்கள்

மனிதர்க்கு எப்படிச் சொல்வது

அவர்கள் உருவாக்கிய சொல்புனைவிலன்றி

கடவுளும் இல்லை சாத்தானும் இல்லை என்பதை

*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...