கப்பலுக்காகப் பெய்த மழை
காகிதக் கப்பலுக்காகப் பெய்த மழை
காகிதக் கப்பலை மூழ்கடித்து விட்டது
வெள்ளத்தில் மிதந்து செல்கின்றன வீடுகள்
மழையை ரசித்தவர்களை
ஹெலிகாப்டர்கள் தேடிக் கொண்டிருக்கின்றன
கடைசிச் சொட்டு மழை
பெய்து முடிக்கிற போது
தாகத்தில் தவித்திருக்கின்றனர் மக்கள்
எப்போதும் பெய்யும் மழையிலும்
நிரம்ப முடியாமல்
கரையுடைந்து கிடக்கிறது ஏரி
*****
ஞாபகம்
அப்போது நினைத்தது
இப்போது மறந்து விட்டது
அப்போது நினைத்தது
ஆகப்பெரும் விசயமாகத் தோன்றுகிறது இப்போது
என்ன நினைத்தது என்ற தெரியாத மனதுக்கு
நினைத்தது ஆகப் பெரும் விசயம்தான் எப்போதும்
எல்லாம் மனதின் நினைப்பன்றி வேறெதுவோ
என்ன நினைத்தேன் என்று தெரியவில்லை
மறதிக்காட்டில் நான் நினைவுகள் இழந்த
பறவையாகி விட்டேன்
பறத்தல் ஒன்றே ஞாபகம் தப்பி நினைவில் இருக்கிறது
*****
இரண்டு கவிதைகளிலும் கடைசி மூன்று வரிகள் அபாரம்
ReplyDeleteவாசித்து நேசிக்கும் தங்கள் அன்புக்கு நன்றிகள் ஐயா!
Delete