27 Aug 2021

மறையாத கானக வானக் கடல்


 இதற்கு மேல் ஒன்றும் கேட்காதீர்கள்

நாம் ஒருவர்

நமக்கேன் ஒருவர்

நிலா

*****

கடைசி பெண் நாய்க்கு

கருத்தடை அறுவைச் சிகிச்சை

முடிந்தது

*****

றுக்கும் அந்த நொடியிலாவது

சுற்றியிருக்கும் உயிர்க் கோழிகளின்

கண்களைக் கட்டி விடு

*****

மறையாத கானக வானக் கடல்

தொட்டிலில் உலாத்தும் மீன்களுக்கு

கூண்டில் சிக்கிய கிளிக்கு

சர்க்கஸில் அடைபட்ட புலிக்கு

அவ்வளவாகத் தெரியாது

தொட்டில் மீனுக்கு

பரந்து விரிந்த கடலின் ஞாபகமும்

கூண்டுக் கிளிக்கு

திக்கெட்டாத வானத்தின் நினைவும்

சர்க்கஸ் புலிக்கு

உருபெரும் கானகக் கனவும்

ஒருபோதும் மறைந்து போகாது

*****

1 comment:

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...