26 Aug 2021

பூமியின் சுழற்சி

பூமியின் சுழற்சி

வெட்டியாக இருப்பவர்

செத்துப் போக வேண்டும் என்றவர்

உங்கள் அலைபேசி எண்கள்

யார் யாரிடம் இருக்கிறது என்று

உங்களுக்கே தெரியாது என்றார்

சற்று நேரம் கழித்து

உங்களை அழிக்க உங்கள் அலைபேசியும்

அலைபாயும் உங்கள் மனமும் போதும் என்றார்

அவர் பேசியதில் உண்மை இருக்குமோ என்று

தோன்றிய போது

தனது கைகளைக் கூரிய கத்தியால்

தானே கிழித்துக் கொண்டார்

அதே நேரத்தில் அவர் மார்பில்

ரத்தத்தைச் சிதறடித்தபடி

பாய்ந்தது துப்பாக்கிக் குண்டு

அவர் தற்கொலை செய்து கொண்டு செத்தாரா

சுடப்பட்டுச் செத்தாரா என்ற குழப்பத்தில்

சற்றே சாய்ந்த அச்சில்

பூமி சுழன்று கொண்டிருக்கிறது

*****

2 comments:

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...