25 Aug 2021

மாவுக்கட்டின் கிறுக்கல்கள்

பெரிதென்று ஏதுமில்லை

நமக்குப் பெரிதாகத் தெரிகிறது

கை உடைந்ததை

அதற்கு மேல்

பெரிதாக நினைக்காத குழந்தை

மாவுக்கட்டு மேல்

கிறுக்க ஆரம்பிக்கிறது

*****

புலப்பாடு

கட்டுபவனுக்கு

தெரிந்த பின்

குட்டை கட்டிடமானது

குளம் அலுவலகமானது

ஏரி பேருந்து நிலையமானது

பின் எல்லாம் மாறியது

சாலை வெள்ளம் தேங்கும் இடமானது

*****

அங்கேயே இருக்கும் பொருள்

ஞாபகமாய்

மறந்து வைத்து விட்டு வந்த பொருள்

அங்கேதான் இருக்கிறது

ஞாபகம்தான் மறந்து விட்டது

*****

No comments:

Post a Comment

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்!

அருணா சிற்றரசுவின் ‘அருகன்’ சிறுகதைத் தொகுப்பு – ஓர் எளிய அறிமுகம்! ‘ அருகன் ’ அருணா சிற்றரசுவின் முதல் சிறுகதைத் தொகுப்பு. முதல் தொகுப்...