புதிய கோடங்கிகள்
தடுமாறுவதற்கான
சூழ்நிலைகள்தான் வாழ்வில் நிறைய
நிலை
தடுமாறாமல் நிதானமாக இருப்பது ஒரு பெரிய தவம்
அது
பெரிய சாதனையாக கருதப்படாது
அதிர்வை
உருவாக்குவதும்
ஆச்சரியப்பட
வைப்பதும்தான் சாதனை
சிலவற்றின்
ஒரே நன்மை என்னவென்றால்
யாருக்கும்
எவ்விதத் தீங்கையும் தராமை
வேண்டுமானால்
அதைக் கடைபிடிக்கலாம்
மற்றபடி
சாதிக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற வழியாக இருக்காது
உப்புச்சப்பற்று
உண்பதில்
என்ன
பெரிய சுவாரசியம் இருந்து விடப் போகிறது
உடலுக்கு
ஆகப் பெரிய நன்மை அதுவென்பதைத் தவிர
*****
பின்னொரு பொழுதில்...
புயலுக்குப்
பின்
சென்ற
தெருவில்
நாய்கள்
எதுவும் குரைக்கவில்லை
*****
No comments:
Post a Comment