அது அது அப்படியே இருக்கின்றன
சூரியன்
உதிப்பதாகக் கொள்ளப்படுகிறது
நிலவு
தேய்வதும் மறைவதாகவும் கூறப்படுகிறது
விண்மீன்கள்
ஒளி விடுவதாகச் சொல்லப்படுகிறது
பூக்கள்
மலர்வதாக வியக்கப்படுகிறது
மழை
பொழிவதாகப் பேசப்படுகிறது
இரவு
பகல் மாறி மாறித் தோன்றுவதாக உணரப்படுகிறது
சூரியன்
அப்படியே
நிலவு
அப்படியே
விண்மீன்கள்
அப்படியே
பூக்கள்
அப்படியே
மழை
அப்படியே
இரவு
பகல் அப்படியே
அப்படியேத்தான்
இருக்கின்றன
நீ
பார்க்கிறாய்
அப்படி
இருப்பதாகச் சொல்கிறாய்
நீ
சிந்திக்கிறாய்
அப்படித்
தோன்றுவதாகப் பேசுகிறாய்
நீ
உணர்கிறாய்
ஆச்சர்யமாய்
இருப்பதாய்க் கூறுகிறாய்
நீ
நீ
நீ
அங்கு
இருக்கிறாய்
அப்படி
அப்படி நிகழ்வதாக மொழிகிறாய்
*****
No comments:
Post a Comment