கருப்பு பிடிக்காது என்பவர்கள் நரைத்த
தலைமுடிக்கு டை அடிப்பார்கள்!
*****
இப்போது
நாம் பொருளாதாரம், சினிமா, அரசியல் சார்ந்த மூன்று எதார்த்தங்களைப் பார்க்கப் போகிறோம்.
ஏன் இந்த மூன்று என்றால், இந்த மூன்றுக்கும் அப்படி ஒரு நெருங்கிய கள்ளத்தொடர்பு இருக்கிறது.
படித்துப் பார்த்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள். மூன்றும் மக்களின் உளவியலை எப்படியெல்லாம்
மாற்றியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
ஏழைகள் நிறைய
உள்ள நாட்டில் எப்படி ஏழைகள் நிறைய பணம் கட்டி படிக்க வைக்கின்றனர் என்று நிறைய முறைகள்
யோசித்து இருக்கிறேன். மற்றும், இப்படி பணம் கட்டிக் கட்டி ஏழையானவர்கள் குறித்தும்
நிறைய யோசித்து இருக்கிறேன். பணம் கட்டி படிக்க வைக்க வேண்டும் என்பதை ஒரு விளம்பரமாகவே
ஆக்கி விட்டார்கள்!
நம் ஹீரோக்களுக்கு
மட்டும் டெக்னாலஜி பிரெய்ன் எங்கிருந்து வருகிறதோ? ஒரு லேப் டாப்பை கையில் வைத்துக்
கொண்டு உலகையே ஹேக் செய்வார்கள். செல்போன் டவர்களையெல்லாம் தங்கள் கட்டுபாட்டில்
கொண்டு வருவார்கள். அதைப் பயன்படுத்தி அவர்களின் ரிலீஸ் படங்களை நெட்டில் ரிலீஸ் ஆவதை,
திருட்டு டிவிடி வெளிவருவதை எப்படியெல்லாம் தடுக்கலாம்! ம்ஹூம்! அது மட்டும் அவர்களின்
டெக்னாலஜி பிரெய்னுக்கு அகப்படாது!
பாவம் தொண்டர்கள்
என்னதான் செய்வார்கள்? தங்கள் தலைவரின் ஸ்டேட்மெண்டுக்காக மன்னிப்புக் கேட்கிறோம்
என்று ஆங்காங்கே ப்ளக்ஸ் வைக்காத குறைதான். இப்படி ஒரு தலைவரையெல்லாம் தமிழகம்தான்
தாங்க முடியும்! அவர் எந்தத் தலைவர்? யார் அவர்? என்றெல்லாம் கேள்வி எழுப்பாமல் நீங்களே
கண்டுபிடிப்பீர்களாக! அப்புறம், கண்டுபிடித்து விட்டேன் என்று அவர் பெயரை பின்னூட்டம்
இடாது இருப்பீர்களாக!
*****
No comments:
Post a Comment