ஒரு தீமை
இன்னொரு தீமையைத்தான் உருவாக்கும் என்பதால் தீமைக்கும் நன்மை செய்ய வேண்டியது தவிர்க்க
முடியாதது ஆகிறது.
ஒரு கொடுமையைத்
தடுக்க இன்னொரு கொடுமையைக் கையில் எடுப்பது மேலும் பல கொடுமைகளை உண்டாக்கி விடும்
என்பதால் கொடுமைகளை மன்னிக்க வேண்டியதும் தவிர்க்க முடியாதது ஆகி விடுகிறது.
தண்டனைகள்
எந்தக் காலத்திலும் எதையும் திருத்துவதில்லை என்பதால் தண்டனைகளுக்குப் பதில் அன்பையே
மீண்டும் மீண்டும் தருவதும் தவிர்க்கவே முடியாதது ஆகிறது.
இதையெல்லாம்
கடைபிடிக்கும் போதுதான் அநியாயத்துக்கு கோபப்படுத்துவார்கள். ஆனால், கோபப்படாமல்
இருக்க வேண்டும்.
என்ன செய்வது
அவர்களின் மனது அப்படி இருக்கிறது. அவர்களைப் போய் கோபப்படாமல் இருங்கள் என்று சொல்ல
முடியாது. ஆகவே அவர்கள் கோபப்படுத்தினாலும் கோபப்படாமல் இருக்க வேண்டியதும் தவிர்க்க
முடியாதது ஆகிறது.
அதைத்தான்
சாந்தம் என்று சொல்கிறார்கள். அது மனதுக்குள் வருவதற்குதான் நிறைய்ய்ய்ய்ய்ய பண்ண
வேண்டியிருக்கிறது.
என்ன நிறைய
பண்ண வேண்டியிருக்கிறது என்றால்...
அதைத் தவம்
என்று தவசிகள் சொல்வார்கள்.
பொறுமை என்று
சம்சாரிகள் சொல்வார்கள்.
*****
No comments:
Post a Comment