காலத்தைக் கொல்லும் முடிவு
இந்தக்
காலத்தைக் கொன்று போடலாம்
என்று
முடிவெடுத்து இருக்கிறேன்
நொடிப்
பொழுதில் முடிவுக்கு வரும்
மேலாளர்
என்னைக் கொல்கிறார்
ஐந்து
நிமிடத்தில் வேலை நீக்கக் கடிதத்தைத்
தயார்
செய்யும் அலுவலர் பயமுறுத்துகிறார்
அடுத்த
சில மணி நேரங்களில் பரவி விடும்
வதந்தி
பீதியைக் கிளப்புகிறது
அடுத்தடுத்த
நாள்களில் முகங்களை
எதிர்கொள்ள
முடியாத மனம் கனக்கிறது
வாரங்கள்
கொஞ்சம் நல்லவைகள்
வேறொரு
வதந்தி கட்டிக் கொள்கிறது
மாதங்கள்
இன்னும் சற்றே நல்லன
முன்னாள்
பரபரப்பை மறக்கடித்து விடுகிறது
ஆண்டுகள்
மிக மிக இனியன
எதுவும்
இப்போது நினைவில் இல்லை
காலத்தைக்
கொன்று போடலாம் என்ற முடிவை
தள்ளிப்
போடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன்
என்
முடிவுக்கு என்னை வாழ்த்துவீர்களா
அதையும்
காலம் கடந்துதான் செய்வீர்களா
காலமே
தப்பித்து ஓடிக் கொள்
*****
No comments:
Post a Comment