கவிதையின்
மொழி பாசம். சமயங்களில் அசட்டுத்தனமாகவும் பேசும்.
*****
பிள்ளைகளின்
ஆர்வமே தனி. இங்க் இல்லையென்றால் பேனாவில் உஜாலாவை எடுத்து ஊற்றி விடுகிறார்கள்.
*****
அரசியலில் பல வசதி. எதை வேண்டுமானாலும் பேசலாம். கொஞ்சம் காமெடியாகப் பேசினால்தான்
கவனிக்கிறார்கள்.
*****
இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொண்டு இலக்கியத்தை இப்படித்தான்
புரிந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். இலக்கியத்தை எப்படி வேண்டுமானாலும்
புரிந்து கொள்ளலாம்.
*****
இலக்கியத்தில் என்ன மண்ணாங்கட்டி இருக்கிறது? சிறிதாகப் பினாத்துபவர்
சிறிய எழுத்தாளர். பெரிதாகப் பினாத்துபவர் பெரிய எழுத்தளார்.
*****
No comments:
Post a Comment