படைப்பு என்பதே காமெடித்தனமானது. இங்கொன்று, அங்கொன்று என்று
வேலை மெனக்கெட்டு பிச்சிப் பிதறி இணைத்தால் படைப்பு. வருங்காலத்தில் ரோபோட்டுகள்
இந்த வேலையை சர்வ சாதாரணமாகச் செய்யப் போகிறது. படைப்பாளிகள் வேலையில்லா பட்டதாரிகளாய்த்
திரிய வேண்டியதுதான்.
*****
பத்திரிகைகளில் படைப்பு வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிறார்.
அவர்களின் இட ஒதுக்கீடு சினிமாவுக்குத்தான் என்பதை அறியாதவர்.
*****
சந்தோஷ் என்பதை சன்தோஷ் என்று எழுதுகிறார்கள். அப்படியும்
எழுதலாம் போலிருக்கிறது.
*****
இருவரும் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.
பின் ஒருவரை ஒருவர் கொலை செய்து கொண்டனர்.
*****
கேரளாவில் படித்தவர்கள் அதிகம் என்கிறார்கள். கேரள மாந்திரீகர்களும்
அதிகம் இல்லையா!
*****
No comments:
Post a Comment