நிலைமாற்றங்கள்
நாம்
கண்களால் பார்க்கும்
சிறு
புள்ளி
நிலவில்
கைகளால்
பிடிக்க
முடியாத பெரிய மலை
கைகளால்
பிடிக்க முடியாத
பெரும்
மேகமாய்த் தெரிவது
கைகளில்
அடங்கும்
துளிகளாய்ப்
பொழியலாம்
சிறியதும்
பெரியதுமாய்த் தெரியும்
தோற்றங்கள்
எதுவும்
தோற்றங்களில்
இல்லை
சிறியது
பெரியதோ
பெரியது
சிறியதோ
நிலைமாற்றங்களில்
எதுவும்
எதுவுமாகலாம்.
*****
No comments:
Post a Comment