அரசியல் வற்றிப் போய் விடக் கூடாது!
பெருங்காட்டில்
தன் பாதை வழித்
தேடிச்
செல்லும் யானைப் போல்
ஆறும்
குளமும் ஏரியும்
தன்னிடம்
தேடி ஓடினால்
வெள்ளம்
என்று பயந்தோடக் கூடாது
அவசர
அவசரமாய் உண்டு
அவசர
அவசரமாய் உடுத்தி
அவசர
அவசரமாய் வாகனத்தில் விரைந்து
அவசர
அவசரமென இருக்கும் நாம்
அவசர
அவசரமாய்ப் பெய்து விடும்
மழையை
குற்றம் சுமத்தக் கூடாது
சாலைக்
குறியீடுகள் மற்றும் சிக்னல் குறித்த
அறிவில்லாமல்
சாலைவழி விரைந்தோடும்
மழைநீரைத்
தடுத்து நிறுத்தி
போக்குவரத்து
விதிகளை மீறியதாகக் கூறி
அபராதம்
விதித்து விடக் கூடாது
தயவுசெய்து
எல்லாம் அபத்தமாக இருக்கிறதென்று
தலையில்
அடித்துக் கொள்ளவும் கூடாது
வடிகால்களில்
பெருச்சாளிகள் குடியிருக்கின்றன
வடிகால்களின்
வழி நெடுகிலும்
பேய்கள்
கட்டிடங்களாக கட்டி நிமிர்த்தியுள்ளன
தேங்கும்
நீரில் பிணங்கள் மிதப்பதற்காக
நாம்
கோபப்பட்டு விடக் கூடாது
நம்
கோபத்தில் எவரேனும் ரோஷப்பட்டு
காசு
சேர்ப்பதையும், கொள்ளையடிப்பதையும்
நிறுத்தி
விட்டால் அரசியல் வற்றிப் போய் விடுமன்றோ!
*****
No comments:
Post a Comment