தமிழில் ஹைக்கூக்கள் அதிகம் வெளிவரவில்லையா?
அண்மையில் ஹைக்கூக்கள் பற்றிய ஒரு புத்தகத்தைப்
படித்த போது தமிழில் அதிகம் ஹைக்கூக்கள் வெளிவரவில்லை என்ற வாசகத்தைப் படிக்க நேர்ந்தது.
தமிழில் எழுதி குவிக்கப்பட்ட ஹைக்கூக்கள்
மாநகரத்து மழை வெள்ளம் போல் அதிகம்.
பிறகு ஏன் ஒரு நூலை அப்படித் தொடங்குகிறார்கள்?
அந்த வாசகம் ஒர் ஈர்ப்பைத் தருகிறது.
தமிழில் அதிகம் ஹைக்கூக்கள் வெளிவரவில்லை
எனும் வாசகத்தைப் படிக்கும் போது, அந்த நூலைப் படித்து முடித்து நாமாவது அதிகமாக ஹைக்கூக்களை
எழுதி தமிழை வளப்படுத்துவோம் என்ற உணர்வு ஏற்படுவது இயல்பானது.
நூலை விறுவிறுப்பாகப் படிப்பதற்கு அந்த
ஒரு வாசகமே போதும்.
நானும் அப்படித்தான் நூலை விறுவிறுப்பாகப்
படித்தேன்.
படித்து முடித்து பத்து நாள்கள் ஆகி விட்டன.
ஒரு ஹைக்கூ கூட தோன்றவில்லை.
தமிழில் அதிகம் ஹைக்கூக்கள் வெளிவராமல்
போனதற்கு நானும் ஒரு காரணமாகி விட்டேனோ என்ற குற்றவுணர்வு இப்போது என்னை வருத்துகிறது.
*****
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.
ReplyDeleteமகிழ்ச்சி ஐயா!
Delete