இட்டிலி தின்பதில் பொய் சொல்வது
சகஜம்
இரண்டு
இட்டிலிகளைச் சாப்பிட்டு விட்டு
நான்கு
என்பான்
இட்டிலி
பிடிக்காத தம்பி
பத்து
இட்டிலிகளை முழுங்கி விட்டு
நான்கு
என்பாள்
டயட்டில்
இருப்பதாகச் சொல்லும் அக்கா
இரண்டு
சப்பாத்தியோடு
இட்டிலி
எதுவும் சாப்பிடவில்லை என
இரண்டு
இட்டிலிகளை
யாருக்கும்
தெரியாமல் சாப்பிட்டுச் செல்வார்
சுகர்
மாத்திரை போடும் அப்பா
எள்ளுப்
பொடிக்கு நல்லெண்ணெய் விட்டு
இருபது
இட்டிலிகள் சாப்பிடலாம் என்பாள்
மீந்த
அஞ்சோ ஆறோ இட்டிலிகளை
தின்னும்
அம்மா
தமிழ்
நாட்டில் இட்டிலி தின்பதில்
பொய்
சொல்வது சகஜம்
அபிதாவும்வும் தன் கடைசிக் காலத்தில்
இரண்டு
இட்டிலிகள் தின்றார்
சுமிதாவும்வும் தன் கடைசிக் காலத்தில்
இரண்டு
இட்டிலிகள் தின்றார்
*****
No comments:
Post a Comment