31 May 2018


விடுபட்டவரின் வார்த்தைகள்
இந்த வார்த்தைகள்
உங்களை விடுவித்து விட்டால்
அதற்கு யாரும் பொறுப்பு கிடையாது
விடுபடுவது அவரவர் விருப்பம்
வார்த்தைகள் சாவியைத் தருகின்றது
பூட்டுகள் உங்களிடம் இருக்கின்றன
திறந்து விடுபடுவதும்
விடுபடாமல் இருப்பதும்
அவரவர் பிரச்சனை
திறந்த பூட்டுகளைத் தூக்கி எறிவதைத் தவிர
வேறு என்ன வழி இருக்க முடியும்
பூட்டுகள் அவரவர் வசமே இருக்க வேண்டும் என்றால்
திறக்காதீர்கள்
விடுபட்ட பின் அங்கே எதுவுமில்லை
பூட்டுகளோடு இருக்கும் போதோ
அவரவர்க்கென்று ஒரு சிறை இருக்கிறது
விடுபட்டவரின் வார்த்தைகளை
எப்போதும் கவனமாகப் பரிசீலியுங்கள்
*****
நன்றி -ஆனந்த விகடன் -இதழ் 30.05.2018 -பக்கம் 38

*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...