31 May 2018

ஒரே ஓர் இரகசியம் உமக்கு மட்டும்...


ஒரே ஓர் இரகசியம் உமக்கு மட்டும்...
            தடங்கல்கள் வேலையைச் செய்ய விடுவதில்லை. அடுத்தது என்ன நடக்குமோ என்ற அச்சம் படரத் தொடங்குகிறது. இரண்டு வழிகள் புலனாகின்றன.
            நடப்பது எப்படியோ அப்படியே நடக்கட்டும் என்பது ஒரு வழி.
            அச்சத்தைக் களைந்து விட்டு மோதிப் பார்ப்பது இன்னொரு வழி.
            மோதிப் பார்க்கும் வழியில் மண்டை உடைந்த குருதியின் சுவடு அல்லது தடைகள் நொறுங்கிக் கிடக்கும் குப்பைகளின் தடங்கள் கிடக்கின்றன.
            மாற்றி யோசிக்கும் மற்றொரு வழியில்தான் சிம்மாசனங்கள் பறிக்கப்படுகின்றன.
            நடப்பது எவ்வழியோ அவ்வழி என்பவர்கள் சலாம் போட்டு நிற்கிறார்கள். அச்சமற்றவர்கள் சிம்மாசனங்களின் அருகில் மெய்க்காப்பாளர்களாக நிற்கிறார்கள்.
*****
கண்ணுக்குத் தெரியாதத் தாக்குதல்கள்
            உலகில் எல்லாவற்றையும் விட மனநிம்மதி முக்கியமானதாகப் படுகிறது. தாக்குதல் என்பதே இக்காலத்தில் மனரீதியாகத்தான் நிகழ்த்தப்படுகிறது. ஒன்று மனதைக் கடந்து செல்ல வேண்டும் அல்லது அந்த விசயத்தில் வைத்திருக்கும் பற்றை விலக்க வேண்டும். அதுதான் வழி.
            அத்தோடு நிதானமானப் போக்கை கைவிட்டு விடக் கூடாது. அதுதான் நிலைநிறுத்துகிறது. அனைத்துப் பலத்தோடு செயல்பட அதுவே அவசியம்.
            நிதானத்தையும், பொறுமையையும் இழக்கும் சம்பவங்கள் மனிதர் தம்மை இழக்கும் சம்பவங்களாகும். நிதானமின்மை, பொறுமையின்மை ஆகிய இந்த இரண்டைத் தவிர எவரையும் எவராலும் அழிக்க முடியாது.
            தம்முடைய கோபங்கள், தாபங்கள் இவைகளைத் தம்மிடமே வைத்துக் கொள்ளும் மனிதர்கள் அசைக்க முடியாதவர்களாகிறார்கள். அதை வெளிக்காட்டுவதன் மூலம் பலகீனம் ஆகி விடுபவர்கள்தான் நாட்டில் நிறைய இருக்கிறார்கள்.
*****

2 comments:

  1. அருமையான வழிகாட்டல்
    பாராட்டுகள்

    ReplyDelete

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...