பின் தொடரும் நிழலின் துரோகங்கள்
காலையில்
ஒரு பக்கமாகவும்
மாலையில்
ஒரு பக்கமாகவும்
விழும்
இந்த நிழல்களை
நம்ப
முடியவில்லை
போலிப்
போராளிகள் போல்
இரவில்
இரவோடு இரவாக
ஒன்றி
விடும் அவைகளை
வெளிச்சத்தைக்
கொணர்ந்து
தேட
வேண்டியதாக இருக்கிறது
வாழ்வோடு
ஒன்றக் கலந்து விட்ட
துரோகத்தையும்
நிழலையும்
விலக்க
முடியவில்லை
பின்
தொடரும் நிழலின் துரோகங்கள்
விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும்
பின்தொடர்ந்து
கொண்டிருக்கின்றன
துரோகங்களின்
நிழல்கள்
*****
No comments:
Post a Comment