அநீதியின் அரச வடிவங்கள்
அரசு என்பது அனைவர்க்கும் பொது. அது தன்னை
விரும்புபவர்கள், விரும்பாதவர்கள் என அனைவர்க்கும் காப்பாக இருக்க வேண்டும். ஆப்பாக
இருக்கக் கூடாது.
ஆட்சிப் பொறுப்பு ஏற்கும் வரை அனைவர்க்கும்
நல்லாட்சியை வழங்குவோம் என்ற வாக்குறுதியை வழங்குபவர்கள், ஆட்சிப் பொறுப்பேற்றதும்
மதவாத அல்லது இனவாதத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஆட்சியையே வழங்குகிறார்கள்.
அரச முகம் இப்படித்தான் நாரகாச கோர முகமாக
மாறுகிறது.
அது எப்படி அப்படி மாறுகிறது என்றால்...
அரசுகளின் அதிகாரப் பிடியிலான அசுர வளர்ச்சி
தற்போது தனக்குப் பிடிக்காதவர்களை அகதிகளாக வெளியேற்றுகிறது. அதற்கு எதிர்ப்புக் கிளம்பும்
போது அகதிகளாக வெளியேற்ற வேண்டியவர்களை தன் நாட்டிலே தங்க வைத்து கமுக்கமாக குடும்பக்
கட்டுபாடு செய்ய வைக்கின்றன.
மியான்மரில் ரோஹிங்கியா இனத்தவருக்கு
தற்போது இதுதான் நேர்கிறது.
இன ஒழிப்பு,
ரசாயன குண்டு வீச்சு,
அணுகுண்டு வீச்சு,
குடும்பக் கட்டுபாட்டு வதை இவைகள் எல்லாம்
வடிவங்களால் வேறுபட்டிருக்கலாம். வன்முறையின் வன்கொடுமை குணாதிசயத்தால் ஒன்றே!
மக்கள் அனைவரும் ஓரினம் என்ற பார்வை மாறி
ஓரினத்தைச் சார்ந்தவர்களே மக்கள் என்ற எதேச்சதிகாரத்தோடு மற்ற இனத்தைச் சார்ந்தவர்கள்
சாவின் விளிம்பில் தள்ளப்படுவதற்கும், நாம் காட்டுமிராண்டிகளாய் பல நூற்றாண்டுகளுக்கு
முன் வாழ்ந்ததற்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?!
*****
No comments:
Post a Comment